வி.எஸ். பாபு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய்

Vijay Death Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Nov 19, 2026 02:20 PM GMT
Report

cm vijay pays tribute to vs babu:  மறைந்த கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ். பாபு உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

வி.எஸ். பாபு உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி

தவெகவை சேர்ந்த கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாரடைப்பால் மருத்துவமனையிலே காலமானார்.

வி.எஸ். பாபு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய் | Cm Vijay Pays Tribute To Vs Babu

வி.எஸ்.பாபுவின் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வி.எஸ்.பாபுவின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக பெரம்பூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

பெரம்பூரில் உள்ள வி.எஸ்.பாபுவின் வீட்டிற்கு வருகை தந்த தமிழ்நாடு முதல்வர் விஜய்,வி.எஸ்.பாபுவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதோடு, அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

 வி.எஸ். பாபு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய் | Cm Vijay Pays Tribute To Vs Babu

வி.எஸ்.பாபுவின் மறைவு காரணமாக நாளை திருச்சி செல்லவிருந்த முதல்வரின் பயண திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.  

7 நாட்களுக்கு கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்து, கழகக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு, துக்கம் அனுசரிக்கப்படுவதாக தவெக அறிவித்துள்ளது.