நடிகர் அஜித் குமாரின் தாயார் மறைவு - முதல்வர் விஜய் இரங்கல்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம்வருபவர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி(84) இன்று வயதுமூப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
அவரது மறைவு செய்தி கேட்டு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முதலமைச்சர் விஜய், நடிகர் அஜித் அம்மாவின் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் தனது பதிவில், அருமை நண்பர் அஜித்குமாரின் தாயார் மோஹினி மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்து தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் என தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 30, 2026
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித்…