சீமானை சந்தித்தார் முதல்வர் விஜய் - பழக்கூடை வழங்கி வாழ்த்திய சீமானின் நெகிழ்ச்சி பதிவு
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சந்தித்துள்ள காணொளியை சீமான் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
முதலமைச்சராக பதவியேற்றதையடுத்து தமிழகத்தின் முக்கிய அரசியல்வாதிகளை சந்திக்கும் தொடர்ச்சியாக இந்த சிநேகபூர்வ சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றார்.
பதவியேற்ற உடனே முக்கியமான மூன்று திட்டங்களில் கையெழுத்திட்ட அவர், சட்ட ஒழுங்கு தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் தனது. கொள்கைத் தலைவர்களில் ஒருவரான தந்தை பெரியாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து முதலமைச்சர் ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை மரியாதை நிமித்தமாகவும், அரசியல் நகரீகத்தை பறைசாற்றுத் வகையிலும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஸ்டாலினை நேரில் காண ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற விஜய்யை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆரத்தழுவி வரவேற்றார்.

இதையடுத்து, அண்ணாநகரில் இருக்கும் மதிமுக பொதுச்செயலாளரும் மூத்த அரசியல் தலைவருமான வைக்கோ வீட்டிற்கு நேரில் சென்று முதலமைச்சர் விஜய் வாழ்த்து பெற்றார்.
அதனை தொடர்ந்து,நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை சந்தித்தார். குறித்த சந்திப்பு குறித்து சீமான் குறிப்பிடுகையில், மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் விஜய் அவர்கள் என்னுடைய இல்லத்திற்கு வருகைப் புரிந்தார். அவரை வரவேற்று, என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்தேன்... என குறிப்பிட்டு காணொளியையும் பதிவிட்டுள்ளார்.