சந்திரபாபு நாயுடுவை சந்தித்த முதல்வர் விஜய்; நதிநீர் பங்கீடு குறித்து ஆலோசனை

Vijay Tamil nadu Andhra Pradesh N. Chandrababu Naidu
By Karthikraja Oct 13, 2026 02:11 PM GMT
Report

cm vijay met chandrababu naidu in andhra visit: ஆந்திராவிற்கு சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து, நதிநீர் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

முதல்வர் விஜய் ஆந்திரா பயணம்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் இன்று ஆந்திராவிற்கு புறப்பட்டார்.

பிற்பகல் 3.45 மணிக்கு விஜயவாடா சென்றடைந்த முதல்வர் விஜய்க்கு ஆந்திர மாநில அமைச்சர்கள் வரவேற்பு அளித்தனர். 

சந்திரபாபு நாயுடுவை சந்தித்த முதல்வர் விஜய்; நதிநீர் பங்கீடு குறித்து ஆலோசனை | Cm Vijay Met Chandrababu Naidu In Andhra Visit

அங்கிருந்து கார் மூலமாக கனக துர்கா கோவிலுக்கு சென்ற முதல்வர் விஜய்க்கு செண்டை மேளம் முழங்க சிறப்பான வரவேற்பு மற்றும் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

சந்திரபாபு நாயுடுவுடன் ஆலோசனை

கோவிலில் சாமி தரிசனம் முடித்த பின்னர் அங்கிருந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இல்லத்திற்கு சென்றார். 

சந்திரபாபு நாயுடுவை சந்தித்த முதல்வர் விஜய்; நதிநீர் பங்கீடு குறித்து ஆலோசனை | Cm Vijay Met Chandrababu Naidu In Andhra Visit

அங்கு சந்திரபாபு நாயுடு மற்றும் அமைச்சர் நாரா லோகேஷ் அவரை வாசலுக்கு வந்து வரவேற்றனர். 

இந்த சந்திப்பில், தமிழ்நாடு ஆந்திர இடையேயான நீர் பங்கீடு, கோதாவரி-கிருஷ்ணா-காவிரி நதிகளை இணைக்கும் திட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

சந்திரபாபு நாயுடுவை சந்தித்த முதல்வர் விஜய்; நதிநீர் பங்கீடு குறித்து ஆலோசனை | Cm Vijay Met Chandrababu Naidu In Andhra Visit

இந்த சந்திப்பின் போது, அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, முதல்வரின் செயலாளர் விஷ்ணு ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.