விஜய் - ஸ்டாலின் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது என்ன? - ஸ்டாலின் பதிவு
முதலமைச்சர் ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை மரியாதை நிமித்தமாகவும், அரசியல் நகரீகத்தை பறைசாற்றுத் வகையிலும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஸ்டாலினை நேரில் காண ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற விஜய்யை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆரத்தழுவி வரவேற்றார்.

ஸ்டாலின் - விஜய் பேசியது என்ன?
இந்த சந்திப்பின்போது, முதலமைச்சர் விஜய், தனது தலைமையிலான புதிய அரசு சிறப்பாக செயல்பட ஆதரவையும் அறிவுரைகளையும் வழங்குமாறு கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த சந்திப்பு தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடும் போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன். என குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து அண்ணாநகரில் இருக்கும் மதிமுக பொதுச்செயலாளரும் மூத்த அரசியல் தலைவருமான வைக்கோ வீட்டிற்கு நேரில் சென்று முதலமைச்சர் விஜய் வாழ்த்து பெற்றார். அதன் போது, விஜயை வீட்டின் வாசலில் துரை வைகோ விஜய்யை கட்டிப்பிடித்து வரவேற்றார்.
பின்னர் வீட்டிற்குள் அழைத்து பொன்னாடை போர்த்தி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து கொண்டார். பின்னர் வைக்கோ தனது குடும்பத்தினருடன் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
சீமானை சந்திக்கிறாரா?
முதலமைச்சர் விஜய் மு.க. ஸ்டாலின், வைக்கோ ஆகிய மூத்த அரசியல் தலைவர்களை சந்தித்த நிலையில், இதையடுத்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.