காவேரி மருத்துவமனையில் ஆளுநர் அர்லேகர் - நேரில் நலம் விசாரிக்கச் செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

Tamil nadu C Joseph Vijay
By Vinoja Nov 19, 2026 09:40 AM GMT
Report

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை, முதலமைச்சர் விஜய் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளார்.

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி செயல்பட்டு வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் அவர் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, கேரள ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

காவேரி மருத்துவமனையில் ஆளுநர் அர்லேகர் - நேரில் நலம் விசாரிக்கச் செல்கிறார் முதலமைச்சர் விஜய்! | Cm Vijay Meet Governor Arlekar At Kauvery Hospital

காவேரி மருத்துவமனையில் அனுமதி

சுமார் ஆறு மாதங்கள் பொறுப்பு ஆளுநராகச் செயல்பட்ட அர்லேகர், கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், ஆளுநர் அர்லேகர் நேற்று மாலை உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார் என்றும், அவரது குடும்பத்தினரும் உடன் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவேரி மருத்துவமனையில் ஆளுநர் அர்லேகர் - நேரில் நலம் விசாரிக்கச் செல்கிறார் முதலமைச்சர் விஜய்! | Cm Vijay Meet Governor Arlekar At Kauvery Hospital

ஆளுநருக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பான மருத்துவ அறிக்கை இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், முதலமைச்சர் விஜய் இன்று பிற்பகல் மருத்துவமனைக்குச் சென்று ஆளுநரை நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.