தொகுதி மறுவரையறை தீர்மானம் - பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

Vijay Narendra Modi
By Karthikraja Aug 13, 2026 03:37 PM GMT
Report

cm vijay letters to pm modi : தொகுதி மறுவரையறை தீர்மானம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

தொகுதி மறுவரையறை தீர்மானம்

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை கொண்டு வரும் முயற்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் விஜய், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். 

தொகுதி மறுவரையறை தீர்மானம் - பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் | Cm Vijay Letters To Modi Regard Delimitation

இந்த தீர்மானத்திற்கு அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தொகுதி மறுவரையறை தீர்மானத்தை பரிசீலித்து அதற்கேற்ப உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

தொகுதி மறுவரையறை தீர்மானம் - பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் | Cm Vijay Letters To Modi Regard Delimitation

இந்த கடிதத்தில், தொகுதிகளை மறுவரையறை செய்தல், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குதல் ஆகியவை குறித்து தமிழகசட்டசபையில் நடந்த விவாதங்கள் குறித்து பிரதமர் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். இது தொடர்பாக, சட்டசபையில் ஆகஸ்ட் 12 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

லோக்சபா எம்பிக்களின் தற்போதைய எண்ணிக்கையை மாற்றாமல் அதே நிலையில் நிரந்தரமாகத் தொடர வேண்டும். மாநிலங்களின் தற்போதைய பார்லிமென்ட் பிரதிநிதித்துவ அளவைப் பாதுகாப்பதற்கும், லோக்சபாவுக்கும் ராஜ்யசபாவுக்கும் இடைபோன விகிதத்தைப் (2.2: 1) பேண வேண்டும்.

இதற்காக 543 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் வரும் லோக்சபா தேர்தலில் இருந்தே பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தேவையான உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

அரசியலமைப்பின் 81(2(a)-ஆம் சட்டப்பிரிவைப் பின்பற்றி தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால் 1967ல் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை 41-லிருந்து 30-ஆகக் குறைக்கப்பட்டது போன்று, தென் மாநிலங்கள் தங்களின் கணிசமான தொகுதிகளை இழக்க நேரிடும்.

மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தி, நல்ல பொருளாதார வளர்ச்சியை எய்திய தென் மாநிலங்களுக்கு, எந்தவொரு மறுவரையறை நடவடிக்கையும் பெரும் அநீதி இழைப்பதாக அமையும்.

தீர்மானத்தில் பின்வருவன வலியுறுத்தப்பட்டுள்ளன:- (i) மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆக நிரந்தரமாக்கப்பட வேண்டும்.

(ii) மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தற்போதைய மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை தற்போதைய அளவிலேயே நிரந்தரமாக்கப்பட வேண்டும். அதாவது, மாநிலங்களுக்கு இடையேயான தற்போதைய இடப் பகிர்வு முறை தொடர வேண்டும்.

(iii) எதிர்வரும் மக்களவைப் பொதுத் தேர்தல்களிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்களிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு (1/3) இடஒதுக்கீட்டின் பலன் கிடைப்பதை ஒன்றிய அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்துகிறது.

மேலும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை இணைத்திருப்பதாகவும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையால் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தைப் பரிசீலித்து, இது தொடர்பான உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களைக் கனிவுடன் கேட்டுக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்." என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.