சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம்.... முதல்வர் விஜய் கொடுத்த வார்னிங்
தமிழக முதல்வர் இன்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைத்து மாஸாக குறித்த வண்டியை ஓட்டிச் சென்றுள்ளார்.
தமிழக முதல்வர்
தமிழக முதல்வர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார்.
அதே போன்று கடந்த மாதம் 10ம் தேதி பொறுப்பேற்றதும் இதன் வேலையை தொடங்குவதற்கு உத்தரவு பிறப்பித்த நிலையில், தான் ஆட்சி அமைத்த 30 நாட்களில் ரூ.354 கோடி நிதி ஒதுக்கி இன்று அதனை தொடங்கி வைத்துள்ளார்.

இந்த சிறப்பு படையானது விஜய்யின் நேரடி மேற்பார்வையில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இப்படையின் தலைமை அதிகாரியாக ஐ.ஜி.பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியினை விஜய் தானே குறித்த வாகனத்தினை ஓட்டி தொடங்கி வைத்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் பேசுகையில், இந்த திட்டம் மனதிற்கு நிறைவாக இருப்பதாகவும், ஆட்சிக்கு வந்த கொஞ்ச நாளில் இந்த திட்டத்தினை தொடங்கியுள்ளோம்.
பெண்களுக்கு எதிரான கொடுமைகளை சிறிதளவு கூட சகித்துக் கொள்ள முடியாது. இந்தத் திட்டத்துக்காக ரூ.354 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக இத்திட்டத்தின் மூலம் 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளது. பெண்கள் பாதுகாப்புக்காக டிரோன் மூலமாக கண்காணிக்கும் பணி அறிமுகம் செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.