நலம் TN: முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்
Vijay
By Fathima
சென்னையில் உதவி மருத்துவ அலுவலர்கள் பணி ஆணைகளை வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் விஜய், நலம் TN என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தார்.
பணி நியமன ஆணைகள்
சென்னை மாநிலக் கல்லூரியில் 751 உதவி மருத்துவ அலுவலர்களுக்கும், சுகாதார ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்ட 1393 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.
இதனை தொடர்ந்து மக்கள் பயன்பாட்டிற்காக மருத்துவ உபகரணங்களையும், 139 கோடி ரூபாயில் 86 கட்டிடங்களையும் திறந்து வைக்கிறார்.
நலம் TN
சுகாதாரம், குடும்பநல அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமாக நலம் TN என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தார்.
அனைத்து சுகாதார சேவைகளையும் ஒரே இணையதளத்தில் மக்கள் எளிதாக பெற உதவும் வகையில் இது தொடங்கப்பட்டுள்ளது.