மகளிர் வெற்றி பயணம்; இலவச டிக்கெட் வழங்கி தொடங்கி வைத்த முதல்வர் விஜய்

Vijay Tamil nadu Women
By Karthikraja Oct 02, 2026 05:25 AM GMT
Report

cm vijay launch vetri bayanam scheme by free ticket: தொலைதூர பேருந்துகளிலும் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் வகையில் வெற்றிப் பயணம் திட்டத்தை முதல்வர் விஜய் டிக்கெட் வழங்கி தொடங்கி வைத்தார்.

வெற்றிப் பயணம் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் விஜய்

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில் மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, பெருமளவில் பயனளித்திடும் விதமாக, வெற்றிப் பயணம் என்ற பெயரில், காந்தியடிகள் பிறந்த நாளில் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது  என கூறியிருந்தார். 

மகளிர் வெற்றி பயணம்; இலவச டிக்கெட் வழங்கி தொடங்கி வைத்த முதல்வர் விஜய் | Cm Vijay Launch Vetri Bayanam By Gives Free Ticket

இதன்படி, வெற்றிப் பயணம் திட்டத்தை இன்று காலை 10 மணிக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். 

இதில், பேருந்தில் பயணித்த மகளிருக்கு அவரே இலவச டிக்கெட் வழங்கினார். மேலும் பேருந்திலிருந்த பயணிகளிடம் நலம் விசாரித்தார். 

மகளிர் வெற்றி பயணம்; இலவச டிக்கெட் வழங்கி தொடங்கி வைத்த முதல்வர் விஜய் | Cm Vijay Launch Vetri Bayanam By Gives Free Ticket

இந்தத் திட்டத்தின் மூலம் மாநகரம், நகரங்களில் சாதாரணப் பேருந்துகள் மட்டுமின்றி மாநகரம், நகர்ப்பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும், மகளிர் இலவசமாகப் பயணிக்கலாம்.

மேலும் கூடுதலாக, மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில், சாதாரணக் கட்டணப் பேருந்துகளிலும் இத்திட்டம் பொருந்தும். இடைத்தேர்தல் காரணமாக, செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் நீங்கலாக விரிவாக்கப்படும் பேருந்து சேவைகள் திட்டம் இப்போது தொடங்கப்பட்டுள்ளது.