தாய் மாமன் தங்க மோதிர திட்டம் - மதுரையில் தொடங்கி வைத்த முதல்வர் விஜய்
cm vijay launches thaai maman thanga modhiram scheme in madurai: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முத்து யாழினி என்ற குழந்தைக்கு 1 கிராம் தங்கம் மோதிரத்தை அணிவித்து தாய் மாமன் தங்க மோதிர திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
தாய் மாமன் தங்க மோதிர திட்டம் தொடக்கம்
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ என்ற பெயரில் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என தவெக சார்பில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்துள்ளார்.

தனி விமானம் மூலமாக மதுரை விமான நிலையம் வந்த அவர் அங்கிருந்து கார் மூலம் ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சென்றார். வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு வழங்கினர்.
பட்டு வேஷ்டி பட்டு சட்டையில் வந்த முதல்வர் விஜய், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முத்து யாழினி என்ற குழந்தைக்கு 1 கிராம் தங்கம் மோதிரத்தை அணிவித்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள 107 அரசு மருத்துவமனைகளில் இந்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைந்தந்த பகுதி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் இன்றே தொடங்கி வைக்கின்றனர்.
22 ஜூன் 2026 முதல் தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் இந்த திட்டத்தில் பயன் பெறுவார்கள்.