கரூரில் ரோடுஷோ, 32 பேருக்கு பணி ஆணை - முதல்வர் விஜய்யின் பயணத்திட்டம்
தவெக தேர்தல் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த பின்னர், முதல்முறையாக முதலமைச்சர் விஜய் கரூர் செல்ல உள்ளார்.
நாளை காலை 9;30 மணிக்கு தனி விமானம் மூலம் கரூர் செல்லும் முதலமைச்சர் விஜய், பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளார்.
முதல்வர் விஜய்யின் கரூர் பயணத்திட்டம்
கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் உள்ள அட்லஸ் கலையரங்க மைதானத்தில் நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்வில், கரூர் நெரிசலில் உயிரிழந்த 41 குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு அரசுப்பணிக்கான ஆணைகள் வழங்க உள்ளார்.
அதனைத்தொடர்ந்து ரூ.1,700 கோடி மதிப்பிலான தோல் அல்லாத காலணிகள் தயாரிக்கும் Evervan Kothari Footwear Private Limited என்ற தனியார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
இதன் மூலம், சுமார் 13,500 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் சுமார் 10 கிமீ தூரத்திற்கு கரூரில் ரோடுஷோ செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் செல்லும் வழி நெடுகிலும், காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதிரும் ஈரான்! அணுமின் நிலையப் பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தங்கள் - அமெரிக்கா தீவிர தாக்குதல் IBC Tamil
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan