நடிகர் அஜித் பங்கேற்கும் கார்பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் விஜய்
By Fathima
பிரபல நடிகர் அஜித் கலந்துகொள்ளும் Le Mans cup silverstone கார்பந்தய போட்டியில் தமிழக முதலமைச்சர் விஜய் இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் தமிழக முதலமைச்சர் விஜய் செப்டம்பர் 10ம் தேதி லண்டன் புறப்பட்டு சென்றார்.
இந்த பயணத்தின் ஒரு நிகழ்வாக இன்று Le Mans cup silverstone கார் பந்தயத்தை விஜய் தொடங்கிவைக்கவுள்ளார்.
இத்தகவலை நடிகர் அஜித் உறுதிப்படுத்தியுள்ளார். இப்போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்கிறார் என்பதால் விஜய்- அஜித் இருவரும் சந்தித்துக்கொள்ளலாம்.
திரைப்படங்களில் அவரது ரசிகர்கள் போட்டியாக பார்க்கப்பட்டாலும் இருவருக்கும் நல்ல நட்பு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
