கோவையில் பெரியார் அறிவுலக கட்டிடத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்
கோவையில் பெரியார் அறிவுலக கட்டிடத்தை முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்தார்.
திறந்து வைத்த முதலமைச்சர்
கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் அறிவுலகம், 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 7 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது.
இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. மாணவர்களின் பயன்பாட்டிற்காக அறிவியல் மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
பெரியார் அறிவுலகத்தை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தார்.

கோவை விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் மற்றும் தவெகவினர் வரவேற்பு அளித்தனர்.
விமான நிலையத்தில் இருந்து அவினாசி சாலை வழியாக காந்திபுரம் வரை சுமார் 10 கி.மீ. தூரம் ரோடு ஷோ சென்றார்.
அப்போது சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, பெரியார் அறிவுலகத்தின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை மற்றும் அறிவுலகத்தின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.
பின்னர் நூலகத்தின் வரவேற்பறை, அறிவியல் மையம், குழந்தைகள் நூலகம், புத்தக வாசிப்புப் பிரிவு மற்றும் டிஜிட்டல் நூலகம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
இதையடுத்து, நூலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்குச் செல்லும் முதலமைச்சர் விஜய்க்கு அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அளித்து நினைவுப் பரிசு வழங்குகின்றனர்.

தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் நிறைவடைந்துள்ள திட்டப் பணிகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார்.
முதலமைச்சர் விஜயின் வருகையை முன்னிட்டு கோவையில் 4,030 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
காவல்துறை பேருந்து வந்தவுடன் கலைந்து சென்ற போராட்டக்காரர்கள்! முடிவுக்கு வருகிறது ஞானசார ஆதரவு போராட்டம் IBC Tamil