ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் - கௌரவித்த முதல்வர் விஜய்
cm vijay honour asian game medal winners: ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்துள்ளார்.
பதக்கம் வென்றவர்களுக்கு முதல்வர் விஜய் கௌரவம்
20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 46வது சதுரங்க ஒலிம்பியாட் தொடர்களில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு அறிவித்த பரிசுத் தொகைகளை வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
இந்த விழாவிற்கு தலைமை தாங்கிய முதல்வர் விஜய், பதக்கம் வென்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகைக்கான காசோலையை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

ஆசிய விளையாட்டில் தடகள பிரிவில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் வென்ற வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு, 1 கோடியே 55 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி கௌரவித்தார்.
ஒலிம்பிக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அதிக பதக்கங்களை வென்று சாதனை படைக்கும் நோக்கில், ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036’ (Dream Olympics 2036) என்ற திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்துள்ளார்;

இத்திட்டத்தின் கீழ் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் (Asian Games) மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் (Commonwealth Games) பதக்கம் வெல்லும் அனைத்து வீரர், வீராங்கனைகளும் நேரடியாகச் சேர்க்கப்பட்டு ஊக்கவிக்கப்படுவர்.
தேர்வாகும் வீரர்களுக்கு உயர்தரப் பயிற்சிக்காக ஆண்டிற்கு ரூ.50 லட்சம் நிதியுதவியுடன், அவர்களின் தினசரித் தேவைகள் மற்றும் பராமரிப்பிற்காக மாதந்தோறும் ரூ.1 லட்சம் உதவித்தொகையும் (Stipend) வழங்கப்படும்.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர் IBC Tamil