பதவியேற்பு விழாவிற்குப் பின் மேசையை தூக்கிய முதல்வர் விஜய் - வைரலாகும் சிம்பிளிசிட்டி வீடியோ!

Vijay Tamil nadu TVK
By Vinoja May 10, 2026 04:50 PM GMT
Report

தமிழக முதல்வராக c.ஜோசப் விஜய் இன்றைய தினம் பதவியேற்றார். பதவியேற்ப்பு விழா முடிவடைந்த சிறிது நேரத்திலேயே, முதலமைச்சர் விஜய் ஒரு குழுவினருக்கு உதவி செய்துள்ள விடயம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.

முதல்வர் விஜய்

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிக்கட்சியாக வெற்றி பெற்றது. அக்கட்சி தலைவரான விஜய் இன்று முதல்வராக பதவி ஏற்றார். 

பதவியேற்பு விழாவிற்குப் பின் மேசையை தூக்கிய முதல்வர் விஜய் - வைரலாகும் சிம்பிளிசிட்டி வீடியோ! | Cm Vijay Helps Move Table After Oath Ceremony

விவிஐபி (VVIP) அந்தஸ்தில் இருக்கும் ஒரு மாநில முதலமைச்சர், எவ்வித அதிகாரத் தோரணையும் இன்றி மேடையில் செய்த செயல் அங்கிருந்த அதிகாரிகளையும் வியப்பில் ஆழ்த்தியது.

விழா முடிவடைந்த சிறிது நேரத்திலேயே, மேடையில் இருந்த ஒரு மேசையைத் தூக்கி நகர்த்துவதற்கு முதலமைச்சர் விஜய் ஒரு குழுவினருக்கு உதவி செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

பதவியேற்பு விழாவிற்குப் பின் மேசையை தூக்கிய முதல்வர் விஜய் - வைரலாகும் சிம்பிளிசிட்டி வீடியோ! | Cm Vijay Helps Move Table After Oath Ceremony

 பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே, சென்னை நேரு மைதானத்தில் தனது வெள்ளை நிற முறையான உடையில், புதிதாகப் பதவியேற்ற முதலமைச்சர், தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு இயல்பாக உதவியுள்ள காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி பராட்டுக்களை குவித்து வருகின்றது.