நவம்பர் 16 டெல்லி செல்லும் முதல்வர் விஜய் - மோடியை சந்திக்க திட்டம்

Vijay Sonia Gandhi Narendra Modi Delhi
By Karthikraja Nov 14, 2026 02:50 PM GMT
Report

cm vijay delhi visit on november 16 for meet modi: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், நவம்பர் 16 ஆம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பயணத்தின் பொது பிரதமர் மோடியை சந்திக்கவும், சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவிலும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நவம்பர் 16 டெல்லி செல்லும் முதல்வர் விஜய்

மேகதாது அணை கட்டப்படுவது உறுதி அதற்கு தமிழ்நாட்டின் அனுமதி தேவையில்லை என கர்நாடக முதலமைச்சர் திரு. டி.கே. சிவக்குமார் சமீபத்தில் பேசினார்.

இதனையடுத்து, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு, தமிழக முதலமைச்சர் விஜய் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

நேற்று கர்நாடகாவில் நடைபெற்ற அரசு நிகழ்வில், பிரதமர் மோடியின் முன்னிலையிலே, மேகதாதுவில் அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது என டி.கே. சிவக்குமார் பேசியதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு எழுந்துள்ளது. 

நவம்பர் 16 டெல்லி செல்லும் முதல்வர் விஜய் - மோடியை சந்திக்க திட்டம் | Cm Vijay Delhi Visit On November 16 For Meet Modi

இந்நிலையில், மேகதாது விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, மேகதாது அணையால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், காங்கிரஸ் மூத்த தலைவரான சோனியா காந்தி எழுதிய 'Belonging: A Journey of Love' என்ற 544 பக்க சுயசரிதை புத்தகம் சமீபத்தில் வெளியானது.

இதில், தனது குழந்தை பருவம் தொடங்கி, ராஜிவ்காந்தி உடனான காதல், அவரது இறப்பு, அதன் பின்னரான அரசியல் வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை பகிர்ந்துள்ளார். 

நவம்பர் 16 டெல்லி செல்லும் முதல்வர் விஜய் - மோடியை சந்திக்க திட்டம் | Cm Vijay Delhi Visit On November 16 For Meet Modi

இந்த புத்தகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா வரும் நவம்பர் 16 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள நிலையில், அதில் விஜய் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.