ஆட்சிக்கு வந்த பிறகும் முதல்வர் விஜய் திமுகவை குறை சொல்கிறார்- கனிமொழி

Vijay Smt M. K. Kanimozhi DMK TVK
By Yashini Jun 02, 2026 10:41 AM GMT
Report

நேற்றும், திருச்சியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய், தவெக ஆட்சி அமைக்க கூடாது என திமுக பல வேலைகள் செய்தது என்று கூறினார்.

இதனைதொடர்ந்து, திமுக ஆட்சியில் போதைப்பொருள் கலாசாரம் அதிகரித்துள்ளது என்று கடுமையாக விமர்ச்சித்தார்.

மேலும், திமுக தோல்விக்கான காரணத்தை வெளியே தேடாமல், வீட்டுக்குள் தேட வேண்டும் என்றும் விமர்சித்திருந்தார்.

ஆட்சிக்கு வந்த பிறகும் முதல்வர் விஜய் திமுகவை குறை சொல்கிறார்- கனிமொழி | Cm Vijay Continues To Criticize The Dmk Kanimozhi

இந்நிலையில், தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் திமுக எம்.எல்.ஏ அலுவலகத்தை கனிமொழி இன்று திறந்து வைத்தார்.

அப்போது கனிமொழியிடம் விஜயின் திருச்சி உரை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

ஆட்சிக்கு வந்த பிறகும் முதல்வர் விஜய் திமுகவை குறை சொல்கிறார்- கனிமொழி | Cm Vijay Continues To Criticize The Dmk Kanimozhi

அதற்கு பதிலளித்த கனிமொழி, ஆட்சிக்கு வந்த பிறகும் முதல்வர் விஜய், திமுகவை குறை கூறிக்கொண்டு இருப்பதாக விமர்சித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சரியாக உள்ளதா என்பதை முதல்வர் விஜய்யிடம்தான் கேட்க வேண்டும் என்று கூறினார்.