இயக்குனரின் மறைவு... கலங்கி நின்ற ராதிகா! கட்டியணைத்து முதல்வர் கூறிய ஆறுதல்
இயக்குனர் பாரதிராஜா மறைவால் கலங்கி நின்ற ராதிகாவிற்கு முதல்வர் விஜய் கட்டியணைத்து ஆறுதல் கூறிய நிகழ்வு அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
இயக்குனர் பாரதிராஜா
தமிழ் திரையுலகில் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதி ராஜா, இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் வலம்வந்து ரசிகர்களை கவர்ந்தவர்.
இவர் 1977ம் ஆண்டு 16 வயதினிலே படத்தின் மூலமாக தமிழ் சினிமாவின் இயக்குனராக அறிமுகமான இவர், அதன் பின்பு பல கிராமத்து படங்களை இயக்கி மக்கள் மத்தியில் முக்கிய இடத்தினை பிடித்தார்.

84 வயதான பாரதிராஜா தனது மகன் இறப்பிற்கு பின்பு உடல்நிலை பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார். சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வந்தார்.
இவர் இயக்கத்தில் தான் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகள் அறிமுகம் ஆனார்கள். அதில் ஒருவர் தான் நடிகை ராதிகா ஆவார்.
தாய்கிழவி படத்திற்கு பின்பு கூட ராதிகா, பாரதி ராஜாவை சந்தித்து பேசினார். அப்பொழுது பாரதி ராஜா கண்டிப்பாக இந்த படத்தில் விருது கிடைக்கும் என்று கூறினார்.
அப்பொழுது ராதிகா விருது வாங்கியவுடன் உங்களது காலில் கொண்டு வந்து வைப்பேன் என்று மகிழ்ச்சியுடன் கூறியிருந்தார். அந்த அளவிற்கு பாரதிராஜா மீது அதிக பாசம் வைத்திருந்தார்.

தற்போது பாரதிராஜாவின் மறைவை தாங்கமுடியாத ராதிகா கலங்கி அழுது கொண்டிருந்த தருணத்தில், முதல்வர் விஜய் கட்டியணைத்து ஆறுதல் கூறியுள்ளார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்த இவர் 84 வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இவரது மறைவு ஒட்டுமொத்த திரையுலகினையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இயக்குனர் இமயம் மறைவிற்கு தமிழக முதல்வர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.