வியட்நாமில் படகு கவிழ்ந்து 10 தமிழர்கள் உயிரிழப்பு - முதல்வர் விஜய் இரங்கல்
வியட்நாமில் படகு கவிழ்ந்து 10 தமிழர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
வியட்நாமில் படகு விபத்தில் 8 தமிழர்கள் உயிரிழப்பு
வியட்நாமின் ஃபு குவோக் கடற்பகுதியில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகள், 4 பணியாளர்கள் உடன் புறப்பட்ட வேகப்படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்தை சந்தித்துள்ளது.

இதில் அருகே இருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் மீட்பு குழு மூலம் 21 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 2 பெண்கள் மற்றும் 13 ஆண்கள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் உயிரிழந்த 15 பேரில்,10 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
It is with profound grief that we share the list of 15 Indian nationals who have lost their lives in the tragic boat accident near Phuc Quoc Island today. The list has been recieved from the Vietnamese authorities.
— India in Vietnam (@AmbHanoi) July 11, 2026
Our prayers are with the families of the deceased.
The Embassy… pic.twitter.com/2fr2TjXuPp
லாவா மொபைல் நிறுவனம் சிறப்பாக பணியாற்றியதற்காக சுற்றுலா அழைத்து சென்றுள்ளது. இதில் பழனியை சேர்ந்த முருகபிரபு, திருச்சியை சேர்ந்த இருவர் மற்றும் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது.
தகவல் மற்றும் உதவியை வழங்குவதற்காக, ஹோ சி மின் நகரில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்திலும், ஹனோயில் உள்ள தூதரகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் இரங்கல்
இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் விஜய் "வியட்நாம் நாட்டின் ஆன் தோய் கடல் பகுதியிலுள்ள ஹான் மே ருட் ங்வோய் (Hon May Rut Ngoai) தீவிற்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் பயணித்த படகு இன்று காலை விபத்தில் சிக்கியதில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும், துயரமும் அடைந்தேன்.

இப்படகு விபத்தில் சிக்கிய தமிழர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்திடும் வகையில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள், புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கிட இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்குக்கொண்டுவருவதற்கு இந்தியத் தூதரகம் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன்.
வியட்நாம் நாட்டின் ஆன் தோய் கடல் பகுதியிலுள்ள ஹான் மே ருட் ங்வோய் (Hon May Rut Ngoai) தீவிற்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் பயணித்த படகு இன்று காலை விபத்தில் சிக்கியதில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும்,…
— CMOTamilNadu (@CMOTamilnadu) July 11, 2026
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்திய பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.