மனிதநேயமற்ற குற்றச் செயல் - முதல்வர் விஜய் இரங்கல்
சூலூர் சிறுமி கொலை தொடர்பாக தமிழக முதல்வர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சூலூர் சிறுமி கொலை
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி மாயமான நிலையில், குளம் அருகே உள்ள முட்புதரில் நேற்று அவரது சடலத்தை மீட்டுள்ளனர்.
இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேத பரிசோதனை முடிவடைந்து சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் இரங்கல்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்." என தெரிவித்துள்ளார்.
விளம்பரத்திற்காக நஞ்சாக்கப்படும் தமிழ் தேசியம்...! காழ்ப்புணர்ச்சி அரசியலைத் தோலுரிக்கும் கருணாநிதி IBC Tamil
தமிழக முதலமைச்சரின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்தி : தவறாக சித்தரிக்கப்பட்டமைக்கு கண்டனம் IBC Tamil