பட்டு வேட்டி சட்டையுடன் தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய்... திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன?
தமிழக முதல்வர் விஜய் தற்போது பட்டு வேட்டி சட்டைக்கு மாறியதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முதலமைச்சர் விஜய்
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக கட்சி தனித்து போட்டியிட்டு பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது.
ஆனால் ஆட்சி அமைப்பதற்கு இன்னும் சில இடங்கள் தேவைப்பட்ட நிலையில், திமுக கட்சியில் கூட்டணியாக இருந்த சில கட்சியினர் தவெக-விற்கு மாறினர்.
பின்பு தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றார். இவர் பதவி ஏற்ற நாளிலிருந்து இவரது ஒவ்வொரு செயலும் மிகவும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றது.

இதுவரை எந்த முதலமைச்சரும் வராத உடையில் முதலமைச்சராக வந்து அமர்ந்தார். ஆம் இவர் கோட் சூட் அணிந்து கொண்டு முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்து கலக்கி வருகின்றார்.
இதுவரை அரசியல் குறித்து பேசாத இளைஞர்கள் பெரும்பாலானோர் அரசியல் குறித்து அதிகமாக தெரிந்து கொள்வதுடன், இவர்களின் ஆர்வமும் அரசியலில் மாறியுள்ளது.
வேட்டி சட்டையில் விஜய்
விஜய் கோட் சூட் அணிந்து தலைமை செயலகத்திற்கு வந்து பணிகளை செய்து வந்த நிலையில், மேற்கத்திய ஸ்டைல் உடையில் காணப்பட்ட விஜய் தற்போது பாரம்பரிய உடையான பட்டு வேட்டி மற்றும் சட்டையில் தலைமை செயலகத்திற்கு வந்துள்ளார்.
அதாவது தனது முகாம் அலுவலகத்திற்கு அருகில் நடைபெற்ற மேலாளர் ஜெகதீஷ் வீட்டு புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்ட அதே உடையில் செயலகத்திற்கும் வந்துள்ளார்.

பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக வந்த முதலமைச்சர் விஜய்யின் காணொளி மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதனை அவதானித்த ரசிகர்கள் மாடர்ன் லுக்கில் மாஸ்... பாரம்பரிய உடையிலும் கம்பீரம் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.