பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை
இயக்குனர் பாரதிராஜா(வயது 84) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார், கிராமத்து பின்னணி கொண்ட பல படங்களை இயக்கிய பாரதிராஜா இயக்குனர் இமயம் என மக்களால் கொண்டாடப்பட்டார்.
முன்னணி நட்சத்திரங்கள் பலரையும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும், இவருக்கு 2004ம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
கடந்தாண்டு மார்ச் மாதம் இவரது மகன் மனோஜ் காலமானதில் இருந்தே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார் பாரதிராஜா.

இந்நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்த போதும் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார், இவரது மரணம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இவரது மறைவுக்கு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியதுடன் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan