காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர் - ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்

Vijay Commonwealth Games
By Karthikraja Jul 27, 2026 06:52 AM GMT
Report

காமன்வெல்த் விளையாட்டு தொடரில், வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டிக்கு முதல்வர் விஜய் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்

 பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டி

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டு தொடரில், ஆண்களுக்கான பளுதூக்குதல் 65 கிலோ பிரிவில், இந்தியா சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 

காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர் - ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய் | Cm Vijay Announce Rs 30 Lakhs For Cwg Medal Winner

ஸ்னாட்ச் (Snatch) முறையில் 126 கிலோவையும், கிளீன் அண்ட் ஜெர்க் (Clean and jerk) முறையில் 160 கிலோவையும் என மொத்தமாக 286 கிலோ எடை தூக்கி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த ராஜா முத்துப் பாண்டி சிறு வயது முதலேபளுதூக்குதலில் ஆர்வம் காட்டி வருகிறார்.

2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்குபெற்ற அவர், 62 கிலோ எடைப்பிரிவில் 266 கிலோ எடையைத் தூக்கி 6வது இடத்தைப் பிடித்த அவரால், காயம் காரணமாக 2022 காமன்வெல்த் விளையாட்டு தொடரில் பங்குபெற முடியவில்லை.

ராஜா முத்துப்பாண்டிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.30 இலட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர் - ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய் | Cm Vijay Announce Rs 30 Lakhs For Cwg Medal Winner

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களின் சாதனையைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக 30 இலட்சம் ரூபாய் வழங்கப்படும். 

அவரது வெற்றி, இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும். அவர், மேலும் பல சாதனைகள் படைத்து இந்திய திருநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணி, ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் பதக்கப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.