ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர் அறிவித்த முதல்வர் விஜய் - யாருக்கெல்லாம் கிடைக்கும்?

Vijay Tamil nadu LPG cylinder
By Karthikraja Aug 24, 2026 07:12 AM GMT
Report

cm vijay announce 3 free lpg cylinders: ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்

தமிழ்நாடு சட்டமன்றம் தொடங்கியதும் முதல்வர் விஜய், 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதில் பேசிய அவர், முதற்கட்டமாக அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஆண்டிற்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர் அறிவித்த முதல்வர் விஜய் - யாருக்கெல்லாம் கிடைக்கும்? | Cm Vijay Announce 3 Free Lpg Cylinders Eligiblity

எரிவாயு சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இத்திட்டத்தினால் சுமார் 1 கோடியே 30 இலட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள். 

மருத்துவ காப்பீடு தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்திய முதல்வர் விஜய் - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மருத்துவ காப்பீடு தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்திய முதல்வர் விஜய் - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இத்திட்டம், வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முதல் செயலாக்கத்திற்கு கொண்டுவரப்படும். இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் சுமார் 4000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பத்தினர், சிறு, குறு விவசாய குடும்பத்தினர், மாற்றுத் திறனாளி குடும்பத்தினர், போன்ற சமூகத்தில் உள்ள நலிந்த குடும்பத்தினர் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.