83வது பிறந்தநாள்... இசைஞானி இளையராஜாவின் சொத்து மதிப்பு...

Ilayaraaja
By Manchu Jun 02, 2026 03:44 PM GMT
Report

இசைஞானி இளையராஜா தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் இவரது சொத்து மதிப்பு குறித்த விபரத்தினை தெரிந்து கொள்வோம்.

இசைஞானி இளையராஜா

தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்டுள்ள இசைஞானி இளையராஜாவின் இசை இன்றும் பலருக்கும் தாலாட்டாகவே இருக்கின்றது.

இவர் ஜுன் 3ம் தேதி தனது 83வது பிறந்தநாள் ஆகும். கலைஞருக்கும் அதே நாளில் பிறந்தநாள் என்பதால் ஒரு தினத்திற்கு முன்பே தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.

அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் 1976ம் ஆண்டு திரையுலகிற்கு அறிமுகமான இவர் தற்போது 50 ஆண்டுகள் ஆகியும் தனது இசை பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றார்.

83வது பிறந்தநாள்... இசைஞானி இளையராஜாவின் சொத்து மதிப்பு... | Cm Vijay And Stalin Wishes For Illayaraja Birthday

விஜய் வீடு தேடி வந்து துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார் - பிரேமலதா விஜயகாந்த்

விஜய் வீடு தேடி வந்து துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார் - பிரேமலதா விஜயகாந்த்

முதல் சம்பளம்

இசைஞானி இளையராஜா தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் பறந்தவர் ஆவார். இவர் குடும்பத்தில் பொருளாதார சூழ்நிலை மோசமாக இருந்ததால் பள்ளிப்படிப்பினை தொடராமல் எட்டாம் வகுப்புடன் முடித்துள்ளார்.

ஒன்பதாம் வகுப்பிற்கு ரூ.25 பணம் கட்ட வேண்டும் என்பதால் வீட்டில் பணம் வாங்க மனதில்லாமல் வேலைக்கு சென்றார். அக்காலத்தில் தான் வைகை அணை கட்டப்பட்டிக்கொண்டிருந்த தருணத்தில், அதில் தண்ணீர் பாய்ச்சுவது போன்ற வேலையை பாட்டு பாடிக்கொண்டே செய்துள்ளார்.

83வது பிறந்தநாள்... இசைஞானி இளையராஜாவின் சொத்து மதிப்பு... | Cm Vijay And Stalin Wishes For Illayaraja Birthday

அவரது பாடலைக் கேட்ட பொறியாளர் எஸ்.கே.நாயர் தனது அலுவலகத்தில் ஏழு ரூபாய்க்கு ஒரு வேலை போட்டுக் கொடுத்துள்ளார். சம்பளம் குறைவாக இருந்தாலும் மகிழ்ச்சியாக வேலை செய்து சம்பளத்தினை வாங்கியுள்ளார்.

புத்தம் புதிதாக ஏழு ரூபாய் நோட்டை கையில் வாங்கிய போது, நான் வானத்தில் பறப்பது போன்று இருந்தது... அந்த மனநிறைவு, சந்தோஷம், பரவசம் பின்பு தனது வாழ்க்கையில் சம்பாதிக்கவில்லை என்று மேடையில் ஒருமுறை பேசியிருந்தார்.

83வது பிறந்தநாள்... இசைஞானி இளையராஜாவின் சொத்து மதிப்பு... | Cm Vijay And Stalin Wishes For Illayaraja Birthday

திமுக தோல்விக்கு காரணம் - திருச்சி கிழக்கில் விளாசிய முதல்வர் விஜய்

திமுக தோல்விக்கு காரணம் - திருச்சி கிழக்கில் விளாசிய முதல்வர் விஜய்

சொத்து என்ன?

இசைஞானி இளையராஜாவிற்கு சுமார் 795-800 கோடி வரை சொத்துக்கள் இருப்பதாகவும், படங்களுக்கு ஓரளவிற்கு சம்பளம் வாங்கினாலும், லைவ் சிம்பனி, கண்டிப்பான காப்பி ரைட்ஸ், இசை லேபில்கள் இதன் மூலமும் வருமானம் வருகின்றது.

சொந்த வீடு, அலுவலகம், கார்கள் என வைத்திருக்கும் இவர் யூடியூப்பில் தனது பாடல்கள் மூலமாக 34 லட்சம் வரை சம்பாதிப்பதாக கூறப்படுகின்றது.

திரையுலகில் சில ஆயிரமாக இருந்த இவரது சம்பளம் தற்போது 100 வது படத்திற்கு பின்பு தான் ரூ.1 லட்சம் கிடைப்பதாக கூறியுள்ளார். ஆனால் ஏழு ரூபாய் சம்பாதித்த போது இருந்த மகிழ்ச்சி, ஏழு கோடி சம்பாதித்த போது கூட கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.