தீபாவளி திருநாள் - முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
cm vijay and political leaders shares wishes for diwali: தீபாவளி பண்டிகைக்கு முதல்வர் விஜய் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தீபாவளி கொண்டாட்டம்
இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளில், இன்று தீபாவளி பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்தாலும், பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்கள் புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.
தீபாவளிக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தலைவர்கள் வாழ்த்து
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தெரிவித்த வாழ்த்து பதிவில், "மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!

இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம்.
மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம். இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்! #CMJosephVijay
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 7, 2026
இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்!" என குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், "தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை உவகையுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த தீபாவளி திருநாளில், மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட, செல்வம் செழித்திட இறைவனின் அருள் கிடைக்கட்டும். இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைக்கட்டும். தீபங்கள் ஒளிர்வதுபோல் மக்களின் வாழ்வும் ஒளிரட்டும்.
தீபத் திருநாளாம் #தீபாவளி பண்டிகையை உவகையுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தீபாவளி திருநாளில், மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட, செல்வம் செழித்திட இறைவனின் அருள் கிடைக்கட்டும். இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைக்கட்டும். தீபங்கள் ஒளிர்வதுபோல் மக்களின் வாழ்வும் ஒளிரட்டும். மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, அனைவருக்கும் இனிய தீபவாளி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன். #HappyDiwali @AIADMKOfficial
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) November 8, 2026
மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, அனைவருக்கும் இனிய தீபவாளி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், "இருள் நீங்கி ஒளி பிறப்பதுபோல, நம் மக்களின் வாழ்வில் துயரங்கள் நீங்கி மகிழ்ச்சி மலரட்டும்! வறுமை அகன்று வளமை பெருகட்டும்! கவலைகள் மறைந்து கனவுகள் நனவாகட்டும்!
இனிய மனங்கள் இணைந்து கொண்டாடும் இத்தீப ஒளித்திருநாளில் உழைக்கும் ஒவ்வொரு கரத்திற்கும் உயர்வும், ஏங்கும் ஒவ்வொரு உள்ளத்திற்கும் நம்பிக்கையும், ஒவ்வொரு இல்லத்திற்கும் மகிழ்ச்சியும் கொண்டுவரட்டும்! உங்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும் அமைதியும், நலமும், வளமும் பெருகட்டும்!
இருள் நீங்கி ஒளி பிறப்பதுபோல, நம் மக்களின் வாழ்வில் துயரங்கள் நீங்கி மகிழ்ச்சி மலரட்டும்! வறுமை அகன்று வளமை பெருகட்டும்! கவலைகள் மறைந்து கனவுகள் நனவாகட்டும்! இனிய மனங்கள் இணைந்து கொண்டாடும் இத்தீப ஒளித்திருநாளில் உழைக்கும் ஒவ்வொரு கரத்திற்கும் உயர்வும், ஏங்கும் ஒவ்வொரு உள்ளத்திற்கும் நம்பிக்கையும், ஒவ்வொரு இல்லத்திற்கும் மகிழ்ச்சியும் கொண்டுவரட்டும்! உங்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும் அமைதியும், நலமும், வளமும் பெருகட்டும்! இயற்கையைப் பாதுகாத்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல், சக உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்காமல், அன்பும் அமைதியும் மகிழ்ச்சியும் பொங்கும் இனிய தீப ஒளித் திருநாளாக இந்நாள் திகழ்ந்திட உளமார வாழ்த்துகிறேன்! அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) November 7, 2026
இயற்கையைப் பாதுகாத்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல், சக உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்காமல், அன்பும் அமைதியும் மகிழ்ச்சியும் பொங்கும் இனிய தீப ஒளித் திருநாளாக இந்நாள் திகழ்ந்திட உளமார வாழ்த்துகிறேன்! அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!" என குறிப்பிட்டுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், "இன்னல் இருள் மறைந்து இன்ப ஒளி நிறைய தீப ஒளி வகை செய்யட்டும்!
வண்ண ஒளிகளின் திருவிழாவான தீபஒளித் திருநாளை தமிழ்நாட்டிலும், உலகின் பிற பகுதிகளிலும் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கொண்டாட்டங்கள் எப்போதும் மகிழ்ச்சியானவை; அனைவராலும் விரும்பப்படுபவை. அத்தகையக் கொண்டாட்டங்களில் தீப ஒளிக்கு சிறப்பான இடம் உண்டு. தீபஒளித் திருநாள் என்றாலே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தான் நினைவுக்கு வரும்.
புத்தாடை அணிந்து, மத்தாப்புக் கொளுத்தி, பிற மத நண்பர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் இனிப்பு வழங்கும் வழக்கம் நட்பை வலுப்படுத்துவதுடன், நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்கிறது. இது தான் தீப ஒளித் திருநாளின் சிறப்பு ஆகும்.
இன்னல் இருள் மறைந்து இன்ப ஒளி நிறைய தீப ஒளி வகை செய்யட்டும்! வண்ண ஒளிகளின் திருவிழாவான தீபஒளித் திருநாளை தமிழ்நாட்டிலும், உலகின் பிற பகுதிகளிலும் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கொண்டாட்டங்கள் எப்போதும் மகிழ்ச்சியானவை; அனைவராலும் விரும்பப்படுபவை. அத்தகையக் கொண்டாட்டங்களில் தீப ஒளிக்கு சிறப்பான இடம் உண்டு. தீபஒளித் திருநாள் என்றாலே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தான் நினைவுக்கு வரும். புத்தாடை அணிந்து, மத்தாப்புக் கொளுத்தி, பிற மத நண்பர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் இனிப்பு வழங்கும் வழக்கம் நட்பை வலுப்படுத்துவதுடன், நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்கிறது. இது தான் தீப ஒளித் திருநாளின் சிறப்பு ஆகும். மக்கள் கொண்டாடும் அனைத்து திருநாள்களுக்கும் ஒரு வரலாறு உண்டு. தீமையை நன்மை அழித்ததன் கொண்டாட்டம் தான் தீப ஒளித் திருநாள் என்று கூறப்படுகிறது. அந்த வரலாற்றின்படி தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் தீப ஒளித் திருநாளாக அமைய வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து இன்னல்களையும் போக்கி, வாழ்வை வண்ணமயமாக்கும் வகையில் அனைத்து நன்மைகளையும் தீப ஒளி திருநாள் வழங்க வேண்டும் என்பது தான் எனது விருப்பமாகும். தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் இப்போது எதிர்கொள்ளும் வறட்சி, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட எல்லா சிக்கலும் இன்றுடன் கரைய வேண்டும். மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி நிறைய வேண்டும். மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும்; போட்டி, பொறாமை, பகைமை, வெறுப்பு போன்றவை விலக வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். #HappyDiwali #deepavali #PMK
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) November 7, 2026
மக்கள் கொண்டாடும் அனைத்து திருநாள்களுக்கும் ஒரு வரலாறு உண்டு. தீமையை நன்மை அழித்ததன் கொண்டாட்டம் தான் தீப ஒளித் திருநாள் என்று கூறப்படுகிறது. அந்த வரலாற்றின்படி தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் தீப ஒளித் திருநாளாக அமைய வேண்டும்.
தமிழ்நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து இன்னல்களையும் போக்கி, வாழ்வை வண்ணமயமாக்கும் வகையில் அனைத்து நன்மைகளையும் தீப ஒளி திருநாள் வழங்க வேண்டும் என்பது தான் எனது விருப்பமாகும்.
தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் இப்போது எதிர்கொள்ளும் வறட்சி, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட எல்லா சிக்கலும் இன்றுடன் கரைய வேண்டும். மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி நிறைய வேண்டும்.
மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும்; போட்டி, பொறாமை, பகைமை, வெறுப்பு போன்றவை விலக வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், "தீப ஒளித் திருநாளாம் "தீபாவளியை" மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
கொடுஞ்செயல்களால் மக்களையும், தேவர்களையும் பெரும் துன்பத்திற்கு ஆளாக்கிக் கொண்டிருந்த நரகாசூரன் எனும் அரக்கனை திருமால் அழித்த இத்திருநாளில், மக்கள் அனைவரின் இல்லங்களிலும் இருளை நீக்கி புதிய ஒளியையும், புத்தம் புதிய நம்பிக்கையையும் பாய்ச்சும் நாளாக அமையட்டும்.
தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்! https://t.co/l4b0OybkVH
— TTV Dhinakaran (@TTVDhinakaran) November 7, 2026
தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் இந்த தித்திக்கும் திருநாளில் ஏழை, எளிய மக்கள் அனைவரின் வாழ்விலும் நலமும், வளமும் பெருகி ஆரோக்கியமும் ஒற்றுமையும் தழைத்தோங்கட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், "தீப ஒளி திருநாளாம் தீபாவளி, இருள் நீங்கி ஒளி பிறக்கும் நன்னாளாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் மலரும் திருநாளாகவும் அமையட்டும்!
இல்லங்கள் தோறும் மகிழ்ச்சி பொங்கிடவும், உள்ளங்கள் தோறும் நம்பிக்கையும் புத்துணர்வும் மலர்ந்திடவும் எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தீப ஒளி திருநாளாம் தீபாவளி, இருள் நீங்கி ஒளி பிறக்கும் நன்னாளாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் மலரும் திருநாளாகவும் அமையட்டும்! இல்லங்கள் தோறும் மகிழ்ச்சி பொங்கிடவும், உள்ளங்கள் தோறும் நம்பிக்கையும் புத்துணர்வும் மலர்ந்திடவும் எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம் தமிழக மக்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடனும், வளத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
— Nainar Nagenthran (@NainarBJP) November 8, 2026
நம் தமிழக மக்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடனும், வளத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! என குறிப்பிட்டுள்ளார் . சென்னை போயஸ் கார்டனில் தனது வீட்டின் முன்னால் குவிந்த ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.
கனடாவில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : கிடைக்கப்போகும் நிரந்தர குடியுரிமை IBC Tamil