தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு - யாருக்கு என்ன துறை?
கடந்த மே 10 ஆம் திகதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இந்நிலையில், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தவெக அமைச்சர்களுக்கு இலாகா
முதலமைச்சர் விஜய், பொது நிர்வாகம், உள்துறை, காவல், சிறப்பு திட்ட செயலாக்கம், இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி, வனப்பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், இளைஞர் நலன், மகளிர் நலன், குழந்தைகள் நலன், முதியோர், மாற்று திறனாளிகள் நலன், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் உள்ளிட்ட துறைகளை கவனிக்க உள்ளார்.

அமைச்சர் என்.ஆனந்திற்கு ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து மற்றும் நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு பொதுப்பணித்துறை(நெடுஞ்சாலை, சிறுதுறைமுகம்) மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அருண்ராஜுக்கு சுகாதாரம், மருத்துவக்கல்வி மற்றும் குடும்பநலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் கே.என்.செங்கோட்டையனுக்கு நிதித்துறை மற்றும் பென்ஷன் ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் வெங்கடரமணனுக்கு உணவு மற்றும் குடிமைப் பொருட்கள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலை கட்டுப்பாடு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமாருக்கு மின்சாரம், மரபுசாரா எரிசக்தி, சட்டம், சிறை, ஊழல் ஒழிப்பு, சட்டமன்றம், ஆளுநர்,தேர்தல்கள் மற்றும் கடவுசீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜ்மோகனுக்கு பள்ளிக்கல்வி, தொல்லியல், தமிழ் ஆட்சி மொழிதமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாடு தகவல் மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பம், மற்றும் திரைப்படச் சட்டம், செய்தித்தாள் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை, அரசு அச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் டி.கே.பிரபுவுக்கு கனிமவளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.