தவெக வாக்குறுதியான மகளிர் இலவச பேருந்து திட்டம் செயல்பாட்டுக்கு வருமா? முதலமைச்சர் முக்கிய அறிவுறுத்தல்

Vijay Tamil nadu
By Vinoja Jun 17, 2026 01:37 PM GMT
Report

தவெக தனது தேர்தல் அறிக்கையில் மாநிலம் முழுவதும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவையை வாக்குறுதியாக அறிவித்திருந்தது.

போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது.

தவெக வாக்குறுதியான மகளிர் இலவச பேருந்து திட்டம் செயல்பாட்டுக்கு வருமா? முதலமைச்சர் முக்கிய அறிவுறுத்தல் | Cm Vijay Advice Officers Free Bus For Women

இதில் மாநிலம் முழுவதும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவையை செயல்படுத்துவதற்கான திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

முக்கிய ஆலோசனைகள்

கூட்டத்தில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி 2.05 கோடி பயணிகள் பயணம் செய்வதும், 64% பயணிகளுக்கு கட்டணமில்லா சேவை வழங்கப்படுவதும் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், மகளிரின் கட்டணமில்லா பயணத் திட்டம், மின்சாரப் பேருந்துகளை அதிகரித்தல், போக்குவரத்து தொழிலாளர்களின் நலன், GPS அடிப்படையிலான கண்காணிப்பு முறை, ஸ்மார்ட் கார்டு வசதி மற்றும் Bus Rapid Transit System திட்டம் ஆகியவை குறித்து முதலமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

புதிதாக கொள்முதல் செய்யப்படும் பேருந்துகள் குளிர்சாதன வசதியுடன் கூடிய மின்சாரப் பேருந்துகளாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.