Global Invesors மாநாடு தொடர்ச்சி...ஜனவரி 28 வெளிநாட்டு பயணம் - புறப்படும் முதலமைச்சர்..!
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொழில்முறை பயணமாக வரும் 28-ஆம் தேதி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
முதலீட்டாளர்கள் மாநாடு
தமிழ்நாட்டில் கடந்த 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6.6 லட்ச கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா நாடுகளை சேர்ந்த கம்பெனிகள் கலந்து கொண்டு பல்வேறு வகையிலான தொழில் வளர்ச்சி முதலீடு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
வெளிநாடு பயணம்
இந்த மாநாட்டின் நீடிச்சியாக வரும் 28-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் முதலமைச்சர் முக ஸ்டாலின், வெளிநாடு பயணங்கள் மேற்கொள்ளவுள்ளார். முதலில் ஸ்பெயின் செல்லவிருக்கும் முதலமைச்சர், அங்கு தொழில் முதலீட்டாளர்களை சந்தித்த பின்னர் அங்கு நடக்கும் கருத்தரங்குகளில் கலந்துகொள்ள இருக்கிறார்.
அதில் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான சாதக சூழ்நிலை பற்றி அவர் பேசவுள்ளார். இந்த சந்திப்பில் பல ஒப்பந்தகள் கையேழுத்திடப்படும் என கூறப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் பயணம் மேற்கொள்ளப்போகின்றார் என தமிழ்நாடு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்திருந்தார்.