தொண்டு நிறுவனங்களுடன் நாளை முதல்வர் ஆலோசனை!

covid19 tamilnadu cm charities
By Irumporai May 18, 2021 10:59 AM GMT
Report

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. இதில் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களின் செயல் போற்றதக்கது.

அதே போல் பொதுமக்களுக்கு சேவை செய்ய தங்களது உயிரையும் பொருட்படுத்தாது தன்னார்வலர்கள் தடுப்பு பணியில் ஈடுபட்டு அரசுக்கு பேருதவி புரிந்து வருகின்றனர்

. இந்த நிலையில், நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் 27 தொண்டு நிறுவனங்களுடன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில், முக்கிய அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.