இது முதலமைச்சர் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் இது : நடிகர் ரஜினிகாந்த்
Rajinikanth
M K Stalin
DMK
By Irumporai
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவரது 70 வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் எங்கள் முதல்வர் எங்கள் பெருமை எனும் தலமைப்பில் முதலமைச்சர் ஸ்டாலினின் 70 ஆண்டுகால பயணம் பற்றிய புகைப்பட தொகுப்பு இடம்பெற்றுள்ளது.
ரஜினிகாந்த் பார்வை
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகர் யோகி பாபு உள்ளிட்டோர் இந்த புகைப்பட கண்காட்சியினை பார்வையிட்டார், அவருடன் அமைச்சர் சேகர் பாபு உடனிருந்தார், அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த்.

அங்கீகாரம்
அப்போது பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை பயணம், அரசியல் பயணம் இரண்டும் ஒன்றுதான்; அவரின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்தான் முதலமைச்சர் பதவி; அவர் நீண்ட ஆரோக்கியத்துடம் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.