ரூ.5060 கோடி தேவை - ஒன்றிய அரசு குழுவை அனுப்பி வைக்க பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

M K Stalin Narendra Modi
By Sumathi Dec 06, 2023 04:25 AM GMT
Report

நிவாரணம் வழங்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நிவாரணம்

தமிழ்நாட்டில் கடந்த 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாக்கிய மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத பெரு மழையின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக அதிகமான மழைப்பொழிவு பெறப்பட்டது.

cm-stalins-letter-to-the-pm-modi

இதன் காரணமாக இந்த நான்கு மாவட்டங்களில் குறிப்பாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சாலைகள், பாலங்கள், பொது கட்டிடங்கள் என பல்வேறு உள் கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளனன. மேலும் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை: பிரதமர் மோடிக்கு தினமும் கடிதம் எழுதும் நிறைமாத கர்ப்பிணி; இதுவரை 264 - எதற்காக..?

கோவை: பிரதமர் மோடிக்கு தினமும் கடிதம் எழுதும் நிறைமாத கர்ப்பிணி; இதுவரை 264 - எதற்காக..?

ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டிற்கு இடைக்கால நிவாரணமாக குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் ரூ.5060 கோடியினை உடனடியாக வழங்கிட வேண்டும். மிக்ஜாம் புயலால் செய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட சேதங்களை கணக்கிடும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது.

ரூ.5060 கோடி தேவை - ஒன்றிய அரசு குழுவை அனுப்பி வைக்க பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் | Cm Stalins Letter To The Pm Modi For Flood

முழு விவரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர் விரிவான சேத அறிக்கை தயார் செய்யப்பட்டு கூடுதல் நிதி கோரப்படும். சேதமடைந்த பகுதிகளை பார்வையிட ஒன்றிய அரசின் குழுவினை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.