நாளை சேலம் வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..டிரோன்கள் பறக்கத் தடை!

M K Stalin DMK Salem
By Vidhya Senthil Oct 21, 2024 03:45 AM GMT
Report

  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் நாளை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 முதலமைச்சர் 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மண்டல வாரியாக மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காகக் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தைத் தொடங்கினார்.

drone

அந்த வகையில் முதலாவது வேலூர் , ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நடந்து வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி அறிவுரை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து 2-வது பயணமாகச் சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட ஆய்வுக் கூட்டம் நாளை 15-ந் தேதி மற்றும் நாளை மறுநாள் 16-ந் தேதி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை நடத்த உள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றமா? தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் யார்?

ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றமா? தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் யார்?

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் நாளை  டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் வருகை

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாமக்கல் மாவட்டத்தில் நாளை நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்க உள்ளார்.

cm stalin visit

இதற்காக அவர் நாளை காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் சேலம் மாவட்டம் காமலாபுரம் விமான நிலையம் வருகிறார். பின்னர் அங்கிருந்து நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்னை திரும்ப உள்ளார்.

இதனையொட்டி, சேலம் மாவட்டத்தில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.