ஓணம் பண்டிகை - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். கேரளாவில் ஓணம் பண்டிகை தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
கேரளாவில் கொரோனா பாதிப்புகள் நாள்தோறும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் பண்டிகையை கொண்டாடும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரள மக்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சகோதரத்துவம், சமூக நல்லிணக்கத்தின் பெருமைமிகு அடையாளமாக ஓணம் பண்டிகை திகழ்கிறது.
அன்புக்கும், ஈகை பண்புக்கும் மிக சிறந்த அடையாளமாக விளங்கும் ஓணம் திருநாளில், திராவிட மொழிகளில் ஒன்றான மலையாள மொழி பேசும் தமிழ்நாடு வாழ் மலையாள மக்களும், கேரள மக்களும் நலமிகு வாழ்வும், அனைத்து வளங்களும் பெற்று இன்புற்றிருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன் என தெரிவித்து உள்ளார்.