‘’ நான் பயப்படவில்லை ‘’ : தனது மனைவிக்கு வித்யாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதலமைச்சர்

dmk cmstalin
By Irumporai Mar 14, 2022 04:15 AM GMT
Report

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களது மனைவி துர்காவின் சகோதரி ஜெயந்தி சரவணன் இல்ல திருமண விழா இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்ச்சியை மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். இதனை தொடர்ந்து, திருமண விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலில் என் துணைவியாருக்கு நான் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல விரும்புகிறேன்.

இரவு 12 மணிக்கு சொல்லிவிட்டேன். இருந்தாலும் எல்லாரும் மேடையில் சொன்னார்கள் நீங்கள் மட்டும் சொல்லவில்லை என்று வீட்டிற்கு சென்ற பின் கேட்டுவிடக்கூடாது.

பயந்து அல்ல, எல்லாரும் வாழ்த்திய அடிப்படையில் இன்றைக்கு 63வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் துணைவியாருக்கும் உங்களோடு சேர்ந்து நானும் என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் எனக் கூறினார்.