வெளிநாட்டு பயணத்தை முடித்து சென்னை திரும்புகிறார் : முதலமைச்சர் ஸ்டாலின்

M K Stalin DMK
By Irumporai May 31, 2023 02:38 AM GMT
Report

வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழகம் திரும்ப உள்ளார்.

முதலமைச்சர் வெளிநாட்டுபயணம் 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 23-ஆம் தேதி 9 நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார்.

சென்னையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலகம் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதற்காகவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் இந்த பயணத்தை மேற்கொண்டார்.  

வெளிநாட்டு பயணத்தை முடித்து சென்னை திரும்புகிறார் : முதலமைச்சர் ஸ்டாலின் | Cm Stalin Will Return To Chennai Foreign Trip

ஜப்பானில் முதலமைச்சர்

இந்த நிலையில் சிங்கப்பூரில் இரண்டு நாட்கள் தனது பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த 25-ஆம் தேதி ஜப்பான் நாட்டின் ஒசாகா மாகாணத்திற்கு சென்றார். இந்த அரசு முறை பயணங்களின் போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கும் அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தமிழகம் திரும்ப உள்ளார். தமிழகம் திரும்பும் முதல்வருக்கு சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.