மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்: 2 நாள் கணவரை கனிவோடு கவனித்து கொண்ட துர்கா ஸ்டாலின்!
சில நாட்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் டெல்லி செல்கிறார் என்ற தகவல் வெளியானது; ஆனால் அரசு தரப்பில் தேதி உறுதிப்படுத்தாத காரணத்தினால் எப்போது செல்கிறார் என எதிர்பார்ப்புகள் கிளம்பியிருந்தது.
இந்த நிலையில் ஜூன் 17 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் டெல்லி செல்கிறார் என உறுதிபடுத்தபட்டது.
இதனை தொடர்ந்து நேற்றைய தினம் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றடைந்தார். யாரும் எதிர்பாராத விதமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலினும் தனி விமானத்தில் சென்றார்.
அரசு ரீதியான பயணத்தில் இவர் ஏன் முதலமைச்சருடன் சென்றார் என கேள்விகள் எழுப்பட்ட நிலையில், தன் கணவரை உடனிருந்து கவனித்து கொண்டுள்ளார் துர்கா ஸ்டாலின்.
நேற்றைய தினம், தமிழ்நாடு இல்லத்திற்கு வந்த முதலமைச்சருடன் தனி காரில் துர்கா ஸ்டாலினும் வந்தார். 1 மணி நேரங்கள் தமிழ்நாடு அரசு இல்லத்தில் இருந்த துர்கா ஸ்டாலின், பின்னர் ராஜேந்திர பிரசாத் சாலையில் உள்ள கனிமொழியின் இல்லத்திற்கு சென்றார்.
பின்னர், கணவர் ஸ்டாலினுக்கு தேவையான ஒவ்வொரு வேளை உணவுகளையும் கனிமொழி இல்லத்தில் தயார் செய்து தமிழ்நாடு இல்லத்திற்கு கொடுத்துள்ளார்.
முதலமைச்சராகவே ஆனாலும் தன் கணவனுக்கு கையால் சமைத்து கொடுக்கு இப்படி ஒரு மனைவி அமைய ஓர் வரம் வேண்டும் என்றே கூறலாம்.
வீட்டில் எத்தனை வேலையாட்கள் இருந்தாலும் தன் கணவரின் உடல்நிலை மீது அதீத அக்கறை காட்டும் துர்கா ஸ்டாலின், கணவரின் முதல் டெல்லி பயணத்தின் போதும் உடனிருந்து கவனித்து கொண்டுள்ளார்.