சென்னை வந்த ஜனாதிபதி திரௌபதி முர்முவை நேரில் வரவேற்று பரிசளித்த முதல்வர் ஸ்டாலின்!

M K Stalin Tamil nadu Draupadi Murmu
By Jiyath Oct 27, 2023 02:33 AM GMT
Report

சென்னை வந்த ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மணிமேகலை புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளார்.

திரௌபதி முர்மு

சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டன்களை வழங்க உள்ளார்.

சென்னை வந்த ஜனாதிபதி திரௌபதி முர்முவை நேரில் வரவேற்று பரிசளித்த முதல்வர் ஸ்டாலின்! | Cm Stalin Welcomes Indian President In Airport

இந்நிலையில் விழாவில் பங்கேற்க ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று இரவு சென்னை வந்தடைந்தார். அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

பரிசளித்த முதல்வர்

அங்கு ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு 'மணிமேகலை' புத்தகத்தின் ஆங்கில பதிப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிசாக வழங்கினார்.

சென்னை வந்த ஜனாதிபதி திரௌபதி முர்முவை நேரில் வரவேற்று பரிசளித்த முதல்வர் ஸ்டாலின்! | Cm Stalin Welcomes Indian President In Airport

குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையம், கிண்டி ஆளுநர் மாளிகை, பட்டமளிப்பு விழா நடைபெறும் கடல்சார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.