தம்பி கொஞ்சம் தம்பி ஓரமா போ : இறங்கி வாலிபால் ஆடிய முதல்வர் வைரலாகும் வீடியோ
விழுப்புரத்தில் சமத்துவபுரத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் அங்கு வாலிபால் ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விழுப்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம் கொழுவாரி ஊராட்சியில் ரூ.2 கோடியே 68 லட்சம் மதிப்பில் 100 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதற்காக நேற்று முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து விழுப்புரம் சென்றார். இன்று காலை 9 மணிக்கு அங்கு இருக்கும் சமத்துவபுரத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதற்காக நேற்று முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து விழுப்புரம் சென்றார். அங்கு புதிதாக கட்டப்பட்ட சமத்துவபுரத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிலையில் அமைச்சர்கள் மா சுப்பிரமணியம், மஸ்தான் ஆகியோர் இந்த சந்திப்பில் உடன் இருந்தனர்.
இதையடுத்து சமத்துவபுரத்தில் உள்ளே இருக்கும் மைதானத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த வாலிபால் மைதானத்தில் இளைஞர்கள் விளையாடிக்கொண்டு இருந்தனர். சட்டென முதல்வர் ஸ்டாலின் உள்ளே சென்று அவர்களுடன் விளையாட தொடங்கினார்.
Hon'ble Chief Minister Mr. @mkstalin inaugurated the Father Periyar Memorial Samadhuvapuram in Kozhuvari, Villupuram District was opened by girl named Mrs.Kamsala!#DMK #CMMKStalin pic.twitter.com/mghOrWq95V
— DMK Updates (@DMK_Updates) April 5, 2022
அப்போது அங்கு இருந்த வீரர் ஒருவரை.. தம்பி ஓரமா போ என்று அதிகாரிகள் சொல்ல.. அங்கே நின்று முதல்வர் வாலிபால் ஆடினார் முதல் பந்தை முதல்வர் ஸ்டாலின் சர்வ் செய்ய ஆட்டம் தொடங்கியது. அதன்பின் இளைஞர்களிடம் மாறி மாறி பால் சென்றது.
பின்னர் முதல்வர் ஸ்டாலினும் தன்னிடம் வந்த பந்தை அடித்தார். கடைசியில் முதல்வர் ஆடிய அணிதான் ஒரு புள்ளியை பெற்று முன்னிலை பெற்றது. இந்த விளையாட்டு திடலுக்கு கலைஞர் விளையாட்டுத்திடல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ஸ்டாலின் வாலிபால் ஆடிய வீடியோ இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.