அருமை நண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற்று இல்லம் திரும்ப விழைகிறேன் : முதல்வர் மு.க ஸ்டாலின் ட்வீட்

cmstalin tweeted rajikanth
By Irumporai Oct 29, 2021 10:47 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக செய்யப்படும் பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இன்று பிற்பகல் காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், தலைசுற்றல் காரணமாக ரஜினி அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு ரத்தத்தில் அடைப்பை நீக்கும் சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததாகவும் ரஜினிகாந்த் உடல்நலம் தேறி வரும் நிலையில் இன்னும் சில நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று அறிக்கை வெளியிட்டது.

இந்த நிலையில், ரஜினிகாந்த் விரைவில் உடல்நலம் தேறி வீடு திரும்பவேண்டுமென முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருமை நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் விரைந்து நலம் பெற்று இல்லம் திரும்ப விழைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.