ஓணம் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Onam M K Stalin DMK
By Irumporai Sep 08, 2022 06:32 AM GMT
Report

ஓணம் பண்டிகைக்கு மலையாளத்தில் வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கேரளா மட்டுமின்றி மலையாள மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் ஓணம் பண்டிகை இன்று வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஓணம் பண்டிகையை கொண்டாடும் மக்களுக்கு மலையாளத்தில் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.

ஓணம் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் :  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வாழ்த்து | Cm Stalin Tweet Wishing Onam In Malayalam

ஓணம் பண்டிகை வாழ்த்து

அந்த ட்விட்டர் பதிவில், மாவேலி மன்னனை மலர்களால் ஆரவாரம் செய்து வரவேற்கும் அனைத்து மலையாளிகளுக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள். எத்தனை கதைகள் புனைந்தாலும் சன்மார்க்க அரசனை மக்கள் மனதில் இருந்து அழிக்க முடியாது.

ஓணம் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்றும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன . இது திராவிடர்களுக்கு இடையே உள்ள ஆழமான தொடர்பைக் காட்டுகிறது. கருத்து வேறுபாடுகளைக் களைந்து இந்த உறவை வலுப்படுத்துவோம் என பதிவிட்டுள்ளார்.