பாலியல் துன்புறுத்தல்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் - முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசம்

M. K. Stalin Chief Minister of Tamil Nadu Children's Day
By Anupriyamkumaresan Nov 14, 2021 07:40 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. மறைந்த இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளை குழந்தைகள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆண்டில் ஒருநாள் மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் மகிழ்ந்து கொண்டாடப்பட வேண்டியவர்கள் குழந்தைகள். இன்றைய சூழலில் குழந்தைகளை குழந்தை பருவத்திற்கே உரிய குணநலன்கள் வாழ விடுவது அவசியமாகிறது. குழந்தைகள் நம் வழியாக வந்தவர்கள்; நமக்காக வந்தவர்கள் அல்ல; அவர்கள் இந்த பூமிக்கு சொந்தமானவர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

பாலியல் துன்புறுத்தல்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் - முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசம் | Cm Stalin Tweet Abput Child Abuse For Childrensday

இந்த காலகட்டத்தில் குழந்தைகளுக்கு பாதுகாப்பான ,அன்பான சூழ்நிலை அளித்து, சமமான வாய்ப்புகளை வழங்கினால், தேச வளர்ச்சியில் அவர்களின் பங்கு நிச்சயம் உண்டு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களாக குழந்தைகள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்களை அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த இந்திய ஒன்றியத்தின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளைக் குழந்தைகள் தினமாகக் கொண்டாடி மகிழ்கிறோம்.

குழந்தைகள் இந்நாட்டின் செல்வங்கள் - ஒளிச்சுடர்கள்! ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வகையில் திறமையானவர்கள், அழகானவர்கள்! குழந்தைகளின் தனித் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களை வளர்த்தெடுப்போம். குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கி, மழலைப்பருவத்தில் உலகை அச்சமின்றி அணுகிக் கற்க துணை நிற்போம்! குழந்தைகளைப் பாதுகாப்பது ஒட்டுமொத்தச் சமூகத்தின் கூட்டுச் செயல்பாடாகும்.

அவர்களுக்கு எதிரான பாலியல் - உளவியல் துன்புறுத்தல்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.