முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்ய பிஎம்டபிள்யூ காரை துபாய் அரசு வழங்கியது
துபாய் எக்ஸ்போவில் பங்கேற்க அரசு முறை பயணமாக சென்னையில் இருந்து நேற்று மாலை விமானத்தில் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றடைந்துள்ளார்.
துபாய் சென்ற அவருக்கு அந்நாட்டிற்கான இந்திய துாதர் அமன் பூரி வரவேற்றார். துபாயில் கடந்த அக்டோபா் 1-இல் தொடங்கிய சா்வதேச தொழில் கண்காட்சி, வருகிற மாா்ச் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தொழில், மருத்துவம், சுற்றுலா, கலை, கலாசாரம், கைத்தறி, கைவினைப் பொருள்கள், ஜவுளி, தமிழ் வளா்ச்சி, தகவல், மின்னணுவியல், தொழிற்பூங்காக்கள், உணவுப் பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் தமிழ்நாட்டின் சிறப்பை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் காட்சிப்படங்கள் தமிழ்நாடு அரங்கில் திரையிடப்படவுள்ளன.
மேலும் புலம்பெயர் தமிழர்களுக்கான தமிழர்களுடனான சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அவர் அரசு முறை பயணமாக வெளிநாடு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்வதற்காக துபாய் அரசு அதிநவீன வசதிகள் கொண்ட பிஎம்டபிள்யூ காரை வதுங்கியுள்ளது.
