பிரதமர் மோடியை நேரில் சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின் - தயாரான 25 கோரிக்கைகள்!
தமிழ்நாடு முதல்வராக பதவியேற்ற பின் மு.க.ஸ்டாலின் வருகிற 17-ம் தேதி முதன்முறையாக டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்திக்க இருக்கிறார்.
அப்போது தமிழ்நாட்டிற்கு தேவையான 25-க்கும் அதிகமான கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் ஸ்டாலின் வழங்க இருக்கிறார். த
இந்நிலையில், ஜுன் 17ம் தேதி காலை 10.30 மணியளவில் பிரதமர் மோடியை சந்திக்க, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியை சந்திக்கும் மு.க.ஸ்டாலின், தமிழகத்துக்கான கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும், கொரோனா தடுப்பு பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும், செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தமிழகத்திற்கு தேவையான 25-க்கும் அதிகமான கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இது தவிர, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளையும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்த இருக்கிறார்.