ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்க இருக்கிறார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில் முழு ஊரடங்கு தற்போது கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆக்சிஜன், மருந்துகள் மற்றும் படுக்கைகள் கிடைப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ராஜ் பவனில் சந்திக்க இருக்கிறார். தமிழகத்தின் தற்போதையை கொரோனா நிலவரம் பற்றி ஆளுநருக்கு தகவல் தெரிவிக்க உள்ளார்.
முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர் துரை முருகன் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோரும் சென்றுள்ளனர்.
அப்போது முதல்வர் நிவாரண நிதிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.