வ.உ.சி.151-வது பிறந்தநாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151வது பிறந்தநாளையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
வ.உ. சிதம்பரனார்
தூத்துக்குடி என்றாலே நம் அனைவருக்கும் நினைவில் வருவது முத்துக்கள் தான். அந்த முத்துக்களில் ஒன்றாக பிறந்தவர் தான் வ.உ. சிதம்பரனார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரத்தில் 1872-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் நாள் உலகநாதர் - பரமாயி அம்மாள் என்ற தம்பதிக்கு மகனாக பிறந்தார்.
சுதந்திரத்திற்காக முதலில் வீறுகொண்டு எழுந்தவர்கள் தமிழர்கள். அந்த வகையில் வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தியபோது அவர்களது பாணியில் சுதேசி கப்பல் வாங்கி வணிகம் மூலம் போராட்டத்தை முன்னெடுத்தவர் வ.உ.சிதம்பரனார்.
செல்வந்தரான குடும்பத்தில் பிறந்தும், வசதியான வாழ்க்கை வாழாமல், சிறை, போராட்டம் என தன் வாழ்நாள் முழுவதும் இந்திய மக்களின் விடுதலைக்காகவே உழைத்தவர் வ.உ.சிதம்பரனார்.
வ.உ.சி. பிறந்தநாள் - முதலமைச்சர் மரியாதை
இன்று வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வ.உ.சிதம்பனாரின் பிறந்தநாளையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார். சென்னை, துறைமுக வளாகத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.