பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin Narendra Modi Delhi
By Nandhini 1 மாதம் முன்

டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

முதலமைச்சர் டெல்லி பயணம்

ஒரு நாள் அரசு பயணமாக தமிழக முதலமைச்சர் இன்று டெல்லி சென்றுள்ளார். இன்று காலை 10:30 மணிக்கு குடியரசு துணை தலைவரை சந்தித்து தமிழக முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.

இன்று மாலை 4:30 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து, செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவித்துவிட்டு, இன்று இரவு விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்

இதனையடுத்து, தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று இந்திய குடியரசு துணை தலைவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். இன்று மாலை செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு நேரில் நன்றி தெரிவிக்கவுள்ளேன் என்று பதிவிட்டார். 

பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

இந்நிலையில், டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் உள்ள பிரதமர் மோடியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.

m.k.stalin-modi

செஸ் ஒலிம்பியாட்டை துவக்கி வைக்க சென்னை வந்த பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் நேரில் நன்றி தெரிவித்தார்.

தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து ஆலோசனை செய்ததாகவும், நீட், மேகதாது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.