பிரதமரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க இருக்கிறேன் - டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு நாள் டெல்லி சென்றுள்ளார்.
முதலமைச்சர் டெல்லி பயணம்
இன்று காலை 10:30 மணிக்கு குடியரசு துணை தலைவரை சந்தித்து தமிழக முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். இன்று மாலை 4:30 மணிக்கு பிரதமர் பிரதமர் மோடியை சந்தித்து செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவிக்க உள்ளார். இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

பிரதமருக்கு நன்றி
இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் டெல்லியில் செந்தியாளர்களை சந்தித்த வீடியோவை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
அதில், இன்று இந்திய குடியரசு துணை தலைவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.இன்று மாலை செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு நேரில் நன்றி தெரிவிக்கவுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
இதோ இது குறித்த வீடியோ -
#LIVE: தில்லியில் செய்தியாளர் சந்திப்பு https://t.co/ct12MGlcTF
— M.K.Stalin (@mkstalin) August 17, 2022