முதன்முறையாக லண்டன் underground-ல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் வைப்பு...!

London M K Stalin Tamil nadu
By Nandhini Aug 17, 2022 07:04 AM GMT
Report

லண்டனில் ஜான் பென்னிகுயிக் சிலை

முல்லைபெரியாறு அணையை, தமது சொந்த செலவில் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக்கிற்கு தமிழக அரசு கவுரவிக்கும் விதமாக, பென்னிகுயிக்கின் சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகரில் திருவுருவ சிலை நிறுவப்படும் என்றும் தேனியிலும் சிலை நிறுவப்படும் என்று கடந்த ஜனவரி 15ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதனையடுத்து, வரும் செப்டம்பர் 10ம் தேதி குயிக் சிலை திறப்பு விழா லண்டனில் நடைபெற உள்ளது.

John Pennycuick

லண்டன் undergroundல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம்

இந்நிலையில், லண்டன் undergroundல் இதுவரை எந்த அரசியல் தலைவர்களின் புகைப்படம் வைக்க அனுமதி இல்லை.

முதல்முறையாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளம்பரம் புகைப்படம் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்த வீடியோக்களும், புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.